< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - கலெக்டர் தலைமையில் நடந்தது

தினத்தந்தி
|
26 July 2022 1:15 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடந்தது.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். அதனை துறைசார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் பயனாளிகளுக்கு விலையில்லா சலவைபெட்டிகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், உதவி ஆணையர் (கலால்) லட்சுமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லலிதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்