< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
புதுக்கோட்டை சிறையில் மக்கள் நீதிமன்றம்
|28 Aug 2023 12:19 AM IST
புதுக்கோட்டை சிறையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட சிறையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜேந்திர கண்ணன், புதுக்கோட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 நீதிபதி ஜெயந்தி மற்றும் நீதிபதி சசிக்குமார் ஆகியோர் தலைமையில் அமர்வு நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்திற்கு புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் 31 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. மேலும் 6 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.