விருதுநகர்
மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்
|மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தொழில் ெதாடங்க கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தொழில் ெதாடங்க கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடனுதவி
தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய திட்டத்தின் கீழ் 21 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு பிளஸ்-2, ஐ.டி.ஐ., பட்டய படிப்பு, பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகள் பெற்றிருந்தால் உற்பத்தி பிரிவு மற்றும் சேவை பிரிவு தொழில் தொடங்க விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க 35 சதவீதம் அதிகபட்சமாக ரூ. 75 லட்சம் மானியத்துடன் ரூ. 5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவி தொகையின் தவணைத் தொகையில் விதிக்கப்படும் வட்டியில் 3 சதவீதம் வட்டி தொகையினை பின்னேர்ப்பு மானியமாக அரசு வழங்கி வருகிறது.
வேலைவாய்ப்பு திட்டம்
பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி பிரிவின்கீழ் ரூ.10 லட்சம் வரையிலும், சேவை பிரிவில் ரூ. 5 லட்சம் வரையிலும் கடனுதவி பெறுவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவையில்லை.
மேற்கண்ட கடன் வரம்பிற்கு மேல் கடனுதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளின் உற்பத்தி தொழில்களுக்கு ரூ. 5 கோடி வரையிலும், சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படும். தொடங்கப்படும் தொழில் வகைகளுக்கு 35 சதவீதம் வரையில் அதிகபட்சமாக ரூ. 17.5 லட்சம் வரையில் மானியமாகவும் வழங்கப்படுகிறது.
இணைய தளம்
இதில் மாற்றுத்திறனாளிகள் செலுத்தும் 5 சதவீத பங்களிப்புத்தொகையானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினரால் மானியமாக வழங்கப்படுகிறது. திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் மேற்கண்ட கடனுதவி திட்டங்களில் தங்களுக்கு தகுதியான கடனுதவி திட்டத்தினை தேர்வு செய்து இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.