< Back
மாநில செய்திகள்
காமராஜர் பயன்படுத்திய காரை பார்வையிட்ட மக்கள்-செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
விருதுநகர்
மாநில செய்திகள்

காமராஜர் பயன்படுத்திய காரை பார்வையிட்ட மக்கள்-செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

தினத்தந்தி
|
16 July 2023 12:21 AM IST

விருதுநகரில் நேற்று நடந்த கல்வித்திருவிழாவில் பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காரை நேற்று ஏராளமானோர் பார்வையிட்டு, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


விருதுநகரில் நேற்று நடந்த கல்வித்திருவிழாவில் பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காரை நேற்று ஏராளமானோர் பார்வையிட்டு, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

காமராஜர் பயன்படுத்திய கார்

பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, அவர் பயணித்த கார் இப்போது பார்வையாளர்களை பரவசப்படுத்தி வருகிறது. இந்த கார், பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு காமராஜர் ெசாந்த ஊரான விருதுநகருக்கு கொண்டு வரப்பட்டு, காமராஜரின் பிறந்த நாளான நேற்று பார்வையாளர்கள் காண நிறுத்தப்பட்டு இருந்தது.

விருதுநகரில் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நாடார் மகாஜன சங்கம் சார்பில் நேற்று கல்வித்திருவிழா நடைபெற்றது. அந்த பள்ளிக்கூட வளாகத்தில் இந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தது.

கல்வித்திருவிழாவுக்கு வந்திருந்த மக்கள் காமராஜர் பயன்படுத்திய காரை பார்வையிட்டதுடன், அதன் முன்பு நின்று செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர். காரையும் படம் எடுத்துக்கொண்டனர்.

உதிரிபாகங்கள்

இந்த கார் 1952-ம் ஆண்டு மாடல் கார் ஆகும். காமராஜர் மறைவுக்கு பின்பு காமராஜர் அறக்கட்டளையின் நிர்வாகத்தில் இந்த கார் சென்னையில் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதனை சீரமைக்க கிருஷ்ணரியை சேர்ந்த அஸ்வின் வர்மா என்பவரிடம் கொடுத்து உள்ளனர்.

காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்த, அஸ்வின் வர்மா, அந்த காரை தான் நடத்தி வரும், வாகன பழுது நீக்கும் மையத்திற்கு கொண்டு சென்று, பிரத்தியேக கவனம் செலுத்தி சீரமைத்து உள்ளார். இதற்காக வெளி இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சில உதிரி பாகங்களை வரவழைத்து பொருத்தி உள்ளார்.

மகிழ்ச்சி தெரிவித்த மக்கள்

காமராஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி அவர் பிறந்த ஊரான விருதுநகருக்கு அந்த காரை கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்,அழகிரி விருப்பம் தெரிவித்ததின் பேரில் அந்த காரை லாரி மூலம் விருதுநகர் கொண்டு வந்துள்ளனர். காமராஜர் பயன்படுத்திய காரை பார்வையிட்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ஏராளமாேனார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்