< Back
மாநில செய்திகள்
பொழுதுபோக்குக்காக மோட்டார் சைக்கிள் திருடியவர்கள் கைது
சென்னை
மாநில செய்திகள்

பொழுதுபோக்குக்காக மோட்டார் சைக்கிள் திருடியவர்கள் கைது

தினத்தந்தி
|
24 March 2023 12:34 PM IST

பொழுதுபோக்குக்காக மோட்டார் சைக்கிள் திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 26). இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக அவர் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

துணை கமிஷனர் கோபி உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் துரை மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் சோமேஷ் (21) உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஓட்டேரி பகுதியை சேர்ந்த இவர்கள், திருட்டு குற்றவாளிகள் அல்ல. பொழுதுபோக்குக்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடுவார்கள். ஜாலியாக அந்த மோட்டார் சைக்கிள்களில் நண்பர்களுடன் சுற்றுவார்கள். இவர்களிடம் இருந்து 8 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

ஓட்டேரி, அயனாவரம், டி.பி.சத்திரம், சிந்தாதிரிப்பேட்டை, நீலாங்கரை, திருமுல்லைவாயல் ஆகிய போலீஸ் நிலையங்களில் இவர்கள் மீது வழக்கு உள்ளது.

மேலும் செய்திகள்