< Back
மாநில செய்திகள்
சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்-போலீசார் அறிவிப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்-போலீசார் அறிவிப்பு

தினத்தந்தி
|
28 Feb 2023 12:15 AM IST

சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்-போலீசார் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் திரிகா என்ற உணவு நிறுவனத்தின் கிளை நிறுவனமான புட் பிளஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் நிதி திரட்டியது.

இந்நிலையில் நிதி பெற்றவர்களிடம் முதிர்வு தொகையை வழங்காமல் ஏமாற்றியது தொடர்பாக பலர் பாதிக்கப்பட்டு அந்த நிறுவனத்திடம் கேட்டனர். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சார்பில் முதிர்வு தொகை வழங்காமல் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாகலட்சுமி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட நிதி நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மேற்கண்ட நிறுவனத்தின் சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டு இருந்தால் அவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம்.

ராமநாதபுரம் நேரு நகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் தங்கள் புகார்களை அளிக்க வேண்டும். இந்த தகவலை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவேனில் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்