< Back
மாநில செய்திகள்
சங்கரன்கோவிலில் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி
தென்காசி
மாநில செய்திகள்

சங்கரன்கோவிலில் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி

தினத்தந்தி
|
8 Sept 2023 12:15 AM IST

சங்கரன்கோவிலில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கர்நகர் 1-ம் தெருவில் வாறுகால் அமைப்பதற்காக தோண்டி போடப்பட்ட சாலையை பல மாதங்களாக சீரமைக்காமல் இருப்பதாகவும், இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகர்மன்ற உறுப்பினர் சரவணகுமார், ம.தி.மு.க. நகர செயலாளர் ரத்னவேல்குமார் மற்றும் பொதுமக்கள் நேற்று நகைக்கடை பஜார் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நகராட்சி அதிகாரிகள் வந்து உறுதி அளித்ததின் ேபரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்