< Back
மாநில செய்திகள்
எடப்பாடியாரே முதல் அமைச்சராக  இருந்திருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர்- எஸ்.பி.வேலுமணி
மாநில செய்திகள்

எடப்பாடியாரே முதல் அமைச்சராக இருந்திருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர்- எஸ்.பி.வேலுமணி

தினத்தந்தி
|
13 Oct 2022 10:12 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். எடப்பாடியாரே முதல்வராக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர்.

சென்னை,

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்,பி.வேலுமணி கூறியதாவது ;

ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் இருக்கின்றது எனவும், திமுக முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:- கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அதிமுக கொடுத்தது, இப்போது கோவையில் எந்த சாலையிலும் மக்கள் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றது,

இந்த ஆட்சிமாற வேண்டும். இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும் மக்கள் முடிவு செய்து விட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். எடப்பாடியாரே முதல்வராக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர்.

காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்ற அதிமுக எம்.பிகள் முடக்கினர். இப்போது இருக்கின்ற எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்துவிட்டு வருகின்றனர். யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல் அமைச்சராக ஸ்டாலின் இருக்கின்றார், ர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்