< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சாலையில் தேங்கி நிற்கும் நீரினால் ெபாதுமக்கள் அவதி
|25 July 2022 12:43 AM IST
சாத்தூரில் தொடர்மழையினால் சாலையில் தேங்கி நிற்கும் நீரினால் ெபாதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்தூர்,
சாத்தூரில் பெய்து வரும் தொடர்மழையினால் வெம்பக்கோட்டை ரோடு, மெயின் ரோடு மற்றும் முக்கிய வீதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பெரிய அளவில் விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக சாலையை தற்காலிகமாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.