< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மின் தடையால் பொதுமக்கள் அவதி
|3 Aug 2023 12:08 AM IST
பெரம்பலூரில் மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
பெரம்பலூர் துணை மின்நிலையத்தில் நேற்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடந்தது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார வினியோகம் பெறும் பகுதிகளில் ஏற்கனவே காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் வினியோகம் இல்லை. அதன்பிறகு மின்சாரம் வந்தது. பின்னர் இரவு 8.45 மணி வரை விட்டு விட்டு மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகினர்.