< Back
மாநில செய்திகள்
அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி
திருவாரூர்
மாநில செய்திகள்

அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி

தினத்தந்தி
|
28 Jun 2023 12:15 AM IST

வலங்கைமான் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மின்மோட்டார் இயங்காததால் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

வலங்கைமான்:

வலங்கைமான் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மின்மோட்டார் இயங்காததால் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

மேட்டூர் அணை

காவிரி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த காவிரி நீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து கல்லணையில் இருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். .

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் கோடை நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

அடிக்கடி ஏற்படும் மின்தடை

மேலும் பருத்தி, வாழை, தென்னை, காய்கறி உள்ளிட்ட தோட்டப்பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது குறுவை சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வலங்கைமான் பகுதியில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. இதனால் மின்மோட்டார் இயங்காததால் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

நாற்றங்கால் தயாரிக்கும் பணி பாதிப்பு

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டாலும் சில நேரங்களில் குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதால் மின்மோட்டார்கள் இயங்காததால் குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்படுகிறது. மின்விசிறி இன்றி இருக்க முடியாத நிலை உள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்

நடவடிக்கை

சில நேரங்களில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாதனங்கள் செயல்படாததாலும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தடையின்றி மின்வினியோகம் வழங்கவும், குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்