< Back
மாநில செய்திகள்
நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்
சிவகங்கை
மாநில செய்திகள்

நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்

தினத்தந்தி
|
22 Aug 2023 12:15 AM IST

நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

ஏய்..! யாருப்பா நீ. இது எங்க ஏரியா. ஒத்தையில வந்துட்டேன் என்று நினைக்காேத! நாங்க இவ்வளவு பேர் இருக்கிறோம் என தெருநாய்கள் கூட்டமாக ஒரு ஒத்த நாயை குரைத்து விரட்டுகிறதோ! இது சிங்கம்புணரி வடக்கு வேளார் தெருவில் கண்ட காட்சி தான் இது. இப்படி நாய்கள் கூட்டம், கூட்டாக திரியும் போது பள்ளி குழந்தைகள், சிறுவர் சிறுமிகள் தனியாக செல்ல முடியும்.

சிங்கம்புணரியை பொறுத்தவரை பஸ் நிலையம், மற்றும் வடக்கு வேளார், கீழத்தெரு, கோவில் வாசல், சுந்தரம் நகர், நியூ காலனி, பாரதிநகர் போன்ற பகுதிகளில் தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. எனவே தெருநாய்களை பிடித்து செல்ல பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Tags :
மேலும் செய்திகள்