< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொதுஇடங்களில் மக்கள் முககவசம் அணிய வேண்டும் - சுகாதாரத்துறை வேண்டுகோள்
|23 Jun 2022 5:33 PM IST
பொதுஇடங்களில் மக்கள் முககவசம் அணியுமாறு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இந்தமாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் 100-க்கு கீழ் இருந்த தொற்று பரவல் தற்போது 500-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பொதுஇடங்களில் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் கடைகள், வணிக வளாகங்களில் கொரோனா தடுப்பு விதிமுறையை கடைபிடிக்க வேண்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.