< Back
மாநில செய்திகள்
வைகை ஆற்றில் குளிக்க மக்கள் இறங்க வேண்டாம் - மதுரை கலெக்டர் எச்சரிக்கை
மாநில செய்திகள்

வைகை ஆற்றில் குளிக்க மக்கள் இறங்க வேண்டாம் - மதுரை கலெக்டர் எச்சரிக்கை

தினத்தந்தி
|
6 Sept 2022 6:04 PM IST

மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பல மழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது.

மதுரை:

மதுரை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர்ந்து பல மழை பெய்து வருவதால் வைகை ஆற்றின் நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது.

மதுரையில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் தொடர்ந்து மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரை முழுவதுமாக ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை கலெக்டர் அனிஷ்சேகர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

வைகை ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் வர உள்ளது. வைகை கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் வைகை ஆற்றில் குளிக்க இறங்குவதை முற்றிலும் தவிர்த்திடவும், ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வைகை ஆற்றில் இறங்காமல் பாதுகாத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது என அவர் கூறியுள்ளார்..

மேலும் செய்திகள்