< Back
மாநில செய்திகள்
மின் விபத்துக்களை தவிர்க்க மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

மின் விபத்துக்களை தவிர்க்க மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

தினத்தந்தி
|
26 Jun 2023 7:24 PM IST

பருவமழையினால் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை செயற் பொறியாளர் ஆர்.குமரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ராணிப்பேட்டை கோட்டம் பகுதியில் பருவ மழையினால் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பியை தொட கூடாது.

குழந்தைகள் மின் கம்பங்களில் ஏறுவது, இழுவை கம்பியை பிடிப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை இழுவை கம்பியில் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

ஈர கைகளினால் மின் சாதனங்களை தொட வேண்டாம். இடி, மின்னலின் போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

மின் கம்பிகளுக்கு கீழே நின்று வாகனங்களில் பாரம் ஏற்றவோ, இறக்கவோ கூடாது.

மின்சார குறைபாடு ஏதேனும் இருப்பின் உதவி பொறியாளர்கள் ராணிப்பேட்டை - 9445855102, 9445855103, நவல்பூர் - 9445855104, ராணிப்பேட்டை கிராமம் - 9445855115, வாலாஜா - 9445855110, 9445854992, அம்மூர் - 9445855112, ஒழுகூர் - 9445855113, சிப்காட் கிழக்கு - 9445855105, சிப்காட் மேற்கு - 9445855106, சிட்கோ - 9445855107, பெல் - 9445855108 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்