< Back
மாநில செய்திகள்
மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்
விழுப்புரம்
மாநில செய்திகள்

மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்

தினத்தந்தி
|
7 Sept 2022 12:22 AM IST

மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தை உள்ளடக்கிய கண்டமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை, காற்று மற்றும் இடியுடன் கூடிய காலங்களில் மின்விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு மின்விபத்துகளையும் அதன் மூலம் ஏற்படும் உயிர் சேதங்களையும் தவிர்க்குமாறு மின்வாரியம் கேட்டுக்கொள்கிறது.

மின் பாதையில் மின்கம்பி அறுந்து கிடந்தால் பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது, அதன் அருகிலும் செல்லக்கூடாது. மின் கம்பங்கள் பழுதடைந்து காணப்பட்டாலும் சாய்ந்த நிலையில் இருந்தாலும் மின் கம்பிகள் தொய்வாக இருந்தாலும் அதனை தொட முயற்சிக்கக்கூடாது. மின்வாரியத்தை சாராத நபர்கள் யாரும் மின்தடையை சரி செய்யும் பொருட்டு மின் கம்பத்திலோ, மின்மாற்றியிலோ ஏறி பணி செய்யக்கூடாது.

கவனமுடன் செயல்பட வேண்டும்

மேலும் டிராக்டர், லாரிகளில் கரும்பு போன்றவற்றை அளவுக்கு அதிகமாக ஏற்றிச்செல்லும் போது அருகில் உள்ள மின்பாதை, மின் கம்பங்களை உரசாமல் கவனமாக செல்ல வேண்டும். பொதுமக்கள், மின் பாதைக்கு அருகில் வீடு, கட்டிடம் கட்டும்போது மின் பாதையில் இருந்து போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும், பொதுமக்கள் தங்களது வீடு, கடை, ஓட்டல் ஆகியவற்றில் வயரிங் செய்யும்போது தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த வயரிங் பொருட்கள் வாங்கி பணியை செய்ய வேண்டும். பொதுமக்கள் தங்களுடைய கால்நடைகளை மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்