< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
பொதுமக்கள் சாலைமறியல்
|9 May 2023 2:08 AM IST
திருவையாறு அருகே சட்ட விரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா்.
திருவையாறு;
திருவையாறு அருகே உள்ள கண்டியூர் ஊராட்சியில் பல மாதங்களாக சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதை கண்டித்து கண்டியூர் மெயின்ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.