< Back
மாநில செய்திகள்
விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்
மாநில செய்திகள்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
13 Oct 2024 10:44 PM IST

விடுமுறை நிறைவடைந்த நிலையில், வெளியூர்களுக்கு சென்றிருந்த மக்கள், தற்போது சென்னை திரும்பி வருகின்றனர்.

சென்னை,

ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்துவரும் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அங்கு விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.

இந்த நிலையில், இன்றுடன் விடுமுறை நிறைவடைந்த நிலையில், வெளியூர்களுக்கு சென்றிருந்த மக்கள், தற்போது சென்னை திரும்பி வருகின்றனர். சிலர் தங்களது சொந்த வாகனங்கள் மூலமாகவே சென்னை திரும்புகின்றனர். மக்கள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலமாக சென்னைக்கு வந்துகொண்டிருப்பதால், புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறைந்த தூரத்தை கடக்க அதிக நேரம் ஆவதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்