< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் - பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
|6 Oct 2022 3:27 AM IST
வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றபடி பரனூர் சுங்கச்சாவடியை கடந்து சென்றன.
சென்னை,
காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் இருந்ததால், விடுமுறையை கொண்டாட சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அவ்வாறு செல்பவர்களுக்காக தமிழக போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றபடி, சுங்கச்சாவடியை கடந்து சென்றன.