< Back
மாநில செய்திகள்
விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: செங்கல்பட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்
மாநில செய்திகள்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: செங்கல்பட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
2 Oct 2023 11:08 PM IST

தொடர் விடுமுறை முடிந்து மக்கள் சென்னை நோக்கி வருவதால், சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

வார இறுதி நாட்கள், காந்தி ஜெயந்தி மற்றும் காலாண்டு விடுமுறை என தொடர் விடுமுறையின் காரணமாக சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது விடுமுறை முடிவடைந்த நிலையில், மக்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வருகிறனர். இன்று இரவு முதலே மக்கள் சென்னைக்கு வரத்தொடங்கிவிட்டனர்.

ஒரே நேரத்தில் அதிக அளவிலான மக்கள் சென்னைக்குள் நுழைவதால், சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதிகளும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்கின்றன.

மேலும் செய்திகள்