< Back
மாநில செய்திகள்
குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
6 July 2022 10:50 PM IST

திருமருகல் அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருமருகல் அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கிடாமங்கலத்தில் கீழத்தெரு, மெயின் ரோடு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இடையாத்தங்குடி ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி கிடாமங்கலத்தை சேர்ந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கிடாமங்கலம் பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்தும், 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை திரும்ப அதே இடத்தில் கட்டித்தர வேண்டும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க வேண்டும் ஆகிய கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த இடையாத்தங்குடி ஊராட்சி தலைவர் முருகன் மற்றும் திருக்கண்ணபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து

மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக காரைக்கால்-பூந்தோட்டம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்