< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
|22 Jan 2023 12:14 AM IST
முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் திருமழபாடி கிராமங்களில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு திருமானூர் கொள்ளிட கரை மற்றும் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில் கொள்ளிடக் கரையில் ஆண்டுேதாறும் ஆடி அமாவாசை, மாசி மகம், தை அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி தை அமாவாசையான நேற்று அப்பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுக்க வந்தனர்.
அவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்து, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் வைத்தியநாத சுவாமி கோவிலில் வழிபாடுகள் செய்து விளக்கேற்றி விட்டு சென்றனர். இதில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.