< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டு மக்கள் மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் - துரை வைகோ
மாநில செய்திகள்

தமிழ்நாட்டு மக்கள் மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் - துரை வைகோ

தினத்தந்தி
|
24 Nov 2022 5:02 PM IST

தமிழ்நாட்டு மக்கள் மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என துரை வைகோ கூறியுள்ளார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆட்சியை பிடிக்க கனவு காணலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்தியதன் விளைவாக செறிவூட்டப்பட்ட பாலின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசு யூரியா விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. விலைவாசி உயர்வுக்கு அடிப்படை காரணம் இதுதான். ம.தி.மு.க. பூரண மது விலக்கு கொள்கையில் உறுதியாக உள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் மதவாத சக்திகளை வேரூன்ற விடமாட்டார்கள். மத்திய அரசு ஜி.எஸ்.டி.நிலுவை தொகையை வழங்காமல் இருந்தபோதும், தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. அண்ணாமலை, பிரதமர் மோடி ஆகியோரின் கருத்துக்மக்கள் நம்ப தயாராக இல்லை. வரும் தேர்தலில் நான் போட்டியிட ஆசையில்லை.

இவ்வாறு துரை வைகோ கூறினார்.

மேலும் செய்திகள்