< Back
மாநில செய்திகள்
தமிழக மக்கள் எங்களை போன்றவர்களை அங்கீகரிக்கவில்லை- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
மாநில செய்திகள்

தமிழக மக்கள் எங்களை போன்றவர்களை அங்கீகரிக்கவில்லை- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

தினத்தந்தி
|
20 Feb 2023 2:13 PM IST

தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டு இருந்தால் நாங்கள் எம்.பிக்கள் ஆகி பாராளுமன்றம் செல்வோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு மாநிலங்களிலும் பணியாளர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும். பணியாளர்கள் தினம் என்பது உன்னதமான தினம். அந்த எண்ணம் தற்போது தான் தோன்றுகிறது. மாநிலங்களில் அதை அமல்படுத்துவதற்கான திட்டம் இருக்கிறது. கவர்னர்கள், ஜனாதிபதி, உள்துறை அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழக மக்கள் எங்களை போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களையும், எங்கள் போன்ற திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை.

ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டு இருந்தால் நாங்கள் எம்.பிக்கள் ஆகி பாராளுமன்றம் செல்வோம். மத்திய மந்திரிகள் ஆவோம். ஆனால் தோற்கடிக்கப்பட்டதால், எங்களின் திறமையை அறிந்த மத்திய அரசு, அதனை வீணடிக்க வேண்டாம் என கருதி கவர்னர்களாக ஆக்கி வருகிறது. எங்களைப் போன்ற திறமை மிக்கவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக வைக்கிறேன். இதை நான் சொன்னாலும் இதுகுறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வரக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்