< Back
மாநில செய்திகள்
கரூரில் வீடுகள், கோவில்களில்  தேசியக்கொடி ஏற்றிய மக்கள்
கரூர்
மாநில செய்திகள்

கரூரில் வீடுகள், கோவில்களில் தேசியக்கொடி ஏற்றிய மக்கள்

தினத்தந்தி
|
15 Aug 2022 12:24 AM IST

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூரில் வீடுகள், கோவில்களில் மக்கள் தேசியக்கொடியை ஏற்றினார்கள்.

சுதந்திரதின விழா

சுதந்திர தின விழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்களில் 3 நாட்கள் தொடர்ந்து தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 நாட்கள் தேசியக்கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது.இதையடுத்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு துணியினால் செய்யப்பட்ட தேசியக்கொடிகளை விற்பனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தேசியக்கொடியை ஏற்றிய மக்கள்

இந்தநிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் காலை வீட்டின் மாடியில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து கரூர் மாவட்டத்தில் வீடுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்களிலும், கோவில்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது. தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோவிலிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. ஒரு சிலர் தங்களின் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்ததை செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தோகைமலை-கிருஷ்ணராயபுரம்

தோகைமலை அருகே உள்ள வேதாசலப்புரம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மகாதானபுரம் பகுதிகளிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினர்.

மேலும் செய்திகள்