< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மக்கள்.. வெறிச்சோடிய சென்னை சாலைகள்
|23 Oct 2022 8:56 PM IST
தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதால், சென்னையின் பிரதான சாலைகள் வெறிச்சோடி கானப்படுகின்றன.
சென்னை,
தீபாவளியை கொண்டாட மக்கள் கடந்த இரு நாட்களாக சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாக சென்னையில் உள்ள பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கானப்படுகிறது.
குறிப்பாக அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, ஜி.எஸ்.டி.சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் முக்கிய மேம்பாலங்கள் அனைத்திலும் குறைந்த எண்ணிக்கையிலேயே வாகனங்கள் பயணிக்கின்றன.
தமிழக போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் கடந்த இரு தினங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
இதேபோல ரெயில், விமானம் மற்றும் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் மக்கள் சென்னையை விட்டு புறப்பட்டுள்ளதால், சென்னையின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி கானப்படுகிறது.