< Back
மாநில செய்திகள்
நீட் தேர்வை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
மாநில செய்திகள்

நீட் தேர்வை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தினத்தந்தி
|
19 Jun 2024 2:50 PM IST

நீட் தேர்வில் சில குளறுபடிகள் நடந்துள்ளன என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நீட் தேர்வை அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நீட் தேர்வில் சில குளறுபடிகள் நடந்துள்ளன. அதற்காக அந்த தேர்வையே ரத்து செய்ய வேண்டுமென்பது தவறு. அந்த குளறுபடிகள் தடுக்கப்படும் என மத்திய அரசு தெளிவாக சொல்லி உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு மூலமாக பல பேர் பயனடைந்து வருகிறார்கள்.

நீட் தேர்வு ஏழை மாணவ-மாணவிகளுக்கு நம்பிக்கைக்குரிய தேர்வாக இருந்து வருகிறது. யார் நினைத்தாலும் நீட்டை தவிர்க்க முடியாது இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. பிரச்சினைகள் களையப்பட வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்