மயிலாடுதுறை
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
|மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.கூட்டத்தில் மொத்தம் 296 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு முதியோர் உதவி தொகை பெறும் மூத்த குடிமக்களுக்கு கலெக்டர் சால்வை அணிவித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேசன், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.