< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
எந்த சிரமமும் இல்லாமல் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர் - போக்குவரத்துத்துறை அதிகாரிகள்
|22 Oct 2022 11:51 AM IST
தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி செல்வதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தமிழக அரசின் சார்பில் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி செல்வதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து செல்ல, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 23-ம் தேதி வரை 10 ஆயிரத்து 518 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆயிரத்து 300 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் சார்பில் முன்பதிவுடன் கூடிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் எவ்வித சிரமமின்றி பயணம் மேற்கொள்வதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.