< Back
மாநில செய்திகள்
சொந்த ஊர் செல்வதற்காக திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த மக்கள்
மாநில செய்திகள்

சொந்த ஊர் செல்வதற்காக திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த மக்கள்

தினத்தந்தி
|
19 April 2024 9:58 AM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருப்பூர்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெளியூர்களில் வசித்துவரும் மக்கள் பலர், வாக்களிப்பதற்காக நேற்று தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் காரணமாக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பேருந்து மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில், திருப்பூர் ரெயில் நிலையத்தில் இன்று காலையும் மக்கள் கூட்டம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். இன்று காலை, கோவை - சென்னை, கோவை - திருப்பதி இண்டர்சிட்டி ரெயில்கள், திருச்சி, மதுரை செல்லும் ரெயில்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்