< Back
மாநில செய்திகள்
துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள்

தினத்தந்தி
|
15 Feb 2023 12:15 AM IST

திருவாடானை துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மனு அளித்தனர்.

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள பாப்பனக்கோட்டை, மஞ்சக்கோட்டை மேலையூர் கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று காலை திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

மஞ்சகோட்டை, பாப்பனக்கோட்டை, மேலையூர், மஞ்சக்கோட்டை கிராமங்களில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். பல ஆண்டுகளாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் தண்ணீருக்காக அலைந்து திரிய வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளை நேரில் சந்தித்தும் மனுக்கள் மூலமாகவும் வலியுறுத்தியும் இதுநாள் வரை எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. எனவே கிராமங்களுக்கு விரைவில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும். காலம் தாழ்த்தினால் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட துணை சூப்பிரண்டு நிரேஷ் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்