< Back
மாநில செய்திகள்
கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
மாநில செய்திகள்

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

தினத்தந்தி
|
30 Jun 2024 9:52 AM IST

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை சற்று குறைந்துள்ளது.

கோவை

கோவை உக்கடம் பகுதியில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு ராமேசுவரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் கடல்மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்தவர்கள் மார்க்கெட்டிற்கு வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். அவர்கள் மார்க்கெட்டில் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர். மீன்களின் விலை சற்று குறைந்துள்ளதால் மீன் பிரியர்கள் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மத்தி மீன் ஒரு கிலோ ரூ.150, சங்கரா மீன் ரூ.250, வஞ்சரம் ரூ.500, செமின் ரூ.300, அயிலை ரூ.150, நண்டு ரூ.200, ஊலி ரூ.300, நெத்திலி ரூ.300 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தை ஒப்பிடும்போது மீன்கள் கிலோவிற்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்