< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஹோலி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத்தவர்கள்
|6 March 2023 9:46 AM IST
வடமாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் இருந்து ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள், ஹோலி பண்டியை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.
மேற்கு வங்கம், ஒரிசா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஷாலிமார் விரைவு ரயிலில் சென்றனர். முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் அதிக பயணிகள் காணப்பட்டனர். பெட்டிகள் வைக்கும் இடங்களிலும் அவர்கள் அமர்ந்து பயணித்தனர்.