< Back
மாநில செய்திகள்
சென்னை, அண்ணா நகர் டவர் பூங்காவை சுற்றிப் பார்க்க அலைமோதும் பொதுமக்கள்
மாநில செய்திகள்

சென்னை, அண்ணா நகர் டவர் பூங்காவை சுற்றிப் பார்க்க அலைமோதும் பொதுமக்கள்

தினத்தந்தி
|
26 March 2023 6:40 PM IST

12 வருடங்களுக்கு பிறகு டவர் பூங்கா திறக்கப்பட்டுள்ள நிலையில், பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து கானப்படுகிறது.

சென்னை,

சென்னை அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக 'டவர்' பூங்கா திகழ்ந்து வந்தது. பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கோபுரத்தின் மேலே பொதுமக்கள் ஏறிச்சென்று சென்னை நகரின் இயற்கை அழகை ரசித்து வந்தனர்.

கடந்த 12 ஆண்டுகளாக பொதுமக்கள் கோபுரத்தின் மேலே செல்ல அனுமதிக்க மறுக்கப்பட்ட நிலையில், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, கோபுரத்தின் பக்கவாட்டு பகுதிகள் அனைத்திலும் தடுப்பு கம்பிகள் மற்றும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டது.

கோபுரத்தின் மேலே ஏறிச்செல்லும் போது கீழே தடுமாறி விழுந்திடாத வகையில் இவை அமைக்கப்பட்டது. கோபுரத்தின் தடுப்பு சுவர் மற்றும் தூண்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது.

பூங்கா சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த டவர் பூங்கா கடந்த சில நாட்களுக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முன்பு திறக்கப்பட்டது.

12 வருடங்களுக்கு பிறகு டவர் பூங்கா திறக்கப்பட்டுள்ள நிலையில், பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து கானப்படுகிறது. குறிப்பாக இன்று விடுமுறை நாள் என்பதால், மக்கள்கூட்டம் அதிகரித்துள்ளது.

மக்கள் கூட்டம் அதிகமானதால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்