< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
26 July 2022 1:04 AM IST

களக்காடு அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் இந்திராநகரில் பொதுவழிப்பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, உரக்கிடங்கு அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளனர். மேலும் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி இந்திராநகரை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த மாதம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

அப்போது விசாரணை நடத்திய கலெக்டர் விஷ்ணு, ஆக்கிரமிப்பை அகற்றும் படி அதிகாரிகளுக்கு உத்தவிட்டதாக தெரிகிறது. ஆனால் அதன் பின்னரும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி இந்திராநகரை சேர்ந்த கிராம மக்கள், முருகன் தலைமையில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று கூறி பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்