பரவி வரும் காய்ச்சல் பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
|பரவி வரும் காய்ச்சல் பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் பருவமழைக் காலங்களில் காய்ச்சல் சதவீதம் அதிகரிப்பது வழக்கம்தான். சாதாரண காலங்களில் 1% பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும். தற்பொழுது ஒன்றரை சதவீதமாக பாதிப்பு உள்ளது. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
பன்றி காய்ச்சால் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 1044 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டும் 368 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதிற்கு குறைவாக 42 குழுந்தைகளும், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 65 பேரும், 15 முதல் 65 வயதிற்குட்பட்டோர்கள் 192 பேரும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 69 பேரும் அடங்குவர்.
இதுவரை 368 பேருக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 5 வயதுக்கு கீழ் 42 குழந்தைகளுக்கும், 5 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள் 65 பேருக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 69 பேருக்கும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 368 பேரில், 264 பேர் தனியார் மருத்துவமனையிலும், 89 பேர் வீடுகளிலும், அரசு மருத்துவமனைகளில் 15 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
லேசான அறிகுறி இருந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பள்ளியில் ஆசிரியர்களும் கண்காணித்து அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கு தகவலளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.