பிரதமர் மோடியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை - திருமாவளவன் விமர்சனம்
|ஈ.வி.எம். எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சதிவேலைகள் செய்து மோசடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மோடி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிரதமர் மோடியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈ.வி.எம். பிரதமர் மோடி. இது வட இந்தியர்கள் மோடிக்கு வைத்துள்ள 'நிக் நேம்'. செல்லப்பெயர்.
"மக்கள் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, ஈ.வி.எம். எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சதிவேலைகள் செய்து மோசடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மோடி" எனக்கூறி, ஈ.வி.எம்.' மை எதிர்த்து வட இந்தியாவில் போராட்டம் வலுக்கிறது.
ஆதலால், சிறுத்தைகள் மீண்டும் களமிறங்குவோம்.
நாட்டைக் காக்க - நாடாளுமன்ற ஜனநாயகம் காக்க - தேர்தல் முறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையைக் காக்க - சிறுத்தைகள் யாவரும் சினந்தெழுவோம்! மோடியின் ஈ.வி.எம். சதி வீழ்த்த இணைந்தெழுவோம்!
பிப்ரவரி 23 - வெகுண்டெழுவோம்!
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.