< Back
மாநில செய்திகள்
உடையா குளத்தில் புதிதாக படித்துறை கட்ட வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

உடையா குளத்தில் புதிதாக படித்துறை கட்ட வேண்டும்

தினத்தந்தி
|
12 Jun 2023 7:15 PM GMT

கூத்தாநல்லூர் அருகே உடையா குளத்தில் புதிதாக படித்துறை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர் அருகே உடையா குளத்தில் புதிதாக படித்துறை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடையா குளம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள சேந்தங்குடி கிராமத்தில் உள்ளது உடையா குளம். இந்த குளத்தில், ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து, சேந்தங்குடி, பொய்கைநல்லூர், புத்தகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த குளத்தின் மேல்கரையில் சிவன் கோவில் உள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்களும் இந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த குளம் போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. குளத்தில் போதிய அளவில் தண்ணீர் தேக்கி வைப்பதற்கு ஏற்ப முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது.

படித்துறைகள் சேதம்

மேலும், இந்த குளத்தின் கரையோரத்தில் கட்டப்பட்ட 3 படித்துறைகளும் முழுவதும் சேதமடைந்து, விரிசல்கள் ஏற்பட்டு, இடிந்து சரிந்து விழுந்து கிடக்கிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக சேதம் அடைந்த படித்துறைகளில், தட்டு தடுமாறி இறங்கி அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், சேதம் அடைந்த படிக்கட்டுகளில் இறங்கும் போது பலர், கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும், மக்கள் பயன்பாட்டில் உள்ள இக்குளத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது என்றும், இதனால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில், குளத்தை முழுமையாக தூர்வார வேண்டும். சேதம் அடைந்த படித்துறைகளை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக படித்துறைகளை கட்டித் தர வேண்டும். இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுத்து, குளத்தை முழுமையாக சீரமைப்பு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்