கன்னியாகுமரி
களியக்காவிளை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
|களியக்காவிளை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வழங்கவில்லை
களியக்காவிளை மார்க்கெட் பகுதியில் ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து களியக்காவிளை ஆர்.சி. தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆர்.சி. தெரு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பகுதியை ேசர்ந்தவர்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது. எனவே தங்கள் பகுதிக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் கேட்டு களியக்காவிளை- மேக்கோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காலி குடங்களைச் சாலையில் வைத்து கோஷம் எழுப்பினர். இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து தடை பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ெபாதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்மோட்டார் பழுதடைந்து உள்ளதாகவும், அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், பணி நிறைவடைந்தவுடன் குடிநீர் முறையாக வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து ெபாதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.