சேலம்
ஊராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் முற்றுகை
|தம்மம்பட்டி அருகே பூச்சிக்கொல்லி ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தம்மம்பட்டி:-
தம்மம்பட்டி அருகே பூச்சிக்கொல்லி ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பூச்சிக்கொல்லி ஆலை
தம்மம்பட்டியை அடுத்துள்ள மண்மலை ஊராட்சி உச்சிமேடு கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவகி தலைமை தாங்கினார். மொடக்குப்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பூச்சிக்கொல்லி ஆலை மற்றும் கல்குவாரி, கிரஷர் ஆகிவற்றின் அனுமதியை ரத்து செய்யக்கோரி, சுதந்திரத்தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும் ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அனுமதி ரத்து
இதையடுத்து தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன் ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பூச்சிக்கொல்லி ஆலை மற்றும் கல்குவாரி, கிரஷர் ஆகியவற்றால் தங்களது விவசாயமும், நிலத்தடி நீரும், இயற்கை வளங்களும் பாதிக்கப்படுகின்றன.
மேலும் வனவிலங்குகளும் கடும் பாதிப்புக்குள்ளாகும் என கூறினர். இதையடுத்து அதிகாரிகள், பூச்சிக்கொல்லி ஆலை, கல்குவாரி, கிரஷர் ஆகியவற்றின் அனுமதியை ரத்து செய்ய உயர் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.