< Back
மாநில செய்திகள்
மின் மோட்டாரை திருடியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மின் மோட்டாரை திருடியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி

தினத்தந்தி
|
24 Aug 2022 10:43 PM IST

உளுந்தூர்பேட்டை அருகே மின் மோட்டாரை திருடியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன் வேலூர் கிராமத்தில் சமீப காலமாக வயல்வெளியில் உள்ள மின் மோட்டார்கள் திருடப்பட்டு வந்தன. இதை அடுத்து அந்த கிராமத்து மக்கள் குழுவாக பிரிந்து இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு் கொண்டிருந்தனர். அப்போது பரமசிவம் என்பவரின் வீட்டின் முன்பு இருந்த மின் மோட்டாரை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(வயது 38) என்பவர் திருடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை கையும், களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மின் மோட்டாரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அயன் வேலூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்