பெரம்பலூர்
கோரையாற்றில் மக்கள் உற்சாக குளியல்
|கோரையாற்றில் மக்கள் உற்சாக குளியல் போட்டனர்.
காணும் பொங்கலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிலர் தங்களது நண்பர்கள், உறவினர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிறுவர் அறிவியல் பூங்காவில் நேற்று மாலை கூடி பொழுதை கழித்தனர். அதில் குழந்தைகள் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி கோட்டை, சாத்தனூர் கல்மரப்பூங்கா, விசுவக்குடி அணை, கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம், கோரையாறு உள்ளிட்ட இடங்களில் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் சென்று பார்வையிட்டனர். விசுவக்குடி அணை, கோரையாற்றில் பொதுமக்கள் உற்சாக குளியலிட்டனர். மேலும் அந்த இடங்களில் தங்களது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனால் அந்த இடங்களில் நேற்று வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் பெரம்பலூரில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் படம் பார்க்க கூட்டம் நிரம்பி வழிந்தது.