< Back
மாநில செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

தினத்தந்தி
|
8 Oct 2023 12:58 AM IST

சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் நகராட்சியின் 18-வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மலையடிப்பட்டி, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தபகுதியில் உள்ள மக்களுக்கு லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கழிவு கலந்து கலங்கலாக வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து லாரி டிரைவரிடம் கேட்டதற்கு அவர் முறையான பதில் அளிக்காததால் பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்