< Back
மாநில செய்திகள்
ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்; நாளை நடக்கிறது
திருச்சி
மாநில செய்திகள்

ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்; நாளை நடக்கிறது

தினத்தந்தி
|
29 May 2023 1:39 AM IST

ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணும் வகையில் குறை தீர்க்கும் கூட்டம், நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஓய்வூதியர்கள் மேற்கண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை எழுத்து பூர்வமாக தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்