< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
|19 July 2023 12:24 AM IST
ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை திலகர் திடலில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி பேசினார். தமிழக அரசு தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 70 வயதை அடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,580 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.