< Back
மாநில செய்திகள்
ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
வேலூர்
மாநில செய்திகள்

ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

தினத்தந்தி
|
18 July 2023 10:27 PM IST

ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராசேந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரவி கோரிக்கையை விளக்கி கூறினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்