கடலூர்
கடலூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|கடலூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குறைந்த ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வனக்காவலர் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் தனுசு தலைமை தாங்கினார். வட்ட இணை செயலாளர்கள் ஜோதி, ஹரிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பாலு.பச்சையப்பன் தொடக்க உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன், மாநில செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் வட்ட தலைவர் சிவப்பிரகாசம், செயலாளர்கள் ராமதாஸ், ராமர், வேளாண்மை துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஆதவன், இந்து சமய அறநிலையத்துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் பாவாடை, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கடலூர் ஒன்றிய தலைவர் நாகம்மாள், மாவட்ட துணை தலைவர் பத்மநாபன், ஹரி கிருஷ்ணன், கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்ட பொருளாளர் குலசேகர மணவாள ராமானுஜம் நன்றி கூறினார்.