< Back
மாநில செய்திகள்
ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்

தினத்தந்தி
|
9 July 2023 7:46 PM IST

சேத்துப்பட்டில் ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் 3-வது கிளை வட்ட பேரவை கூட்டம் சேத்துப்பட்டில் நடந்தது. வட்ட தலைவர் குழந்தைவேலு, துணை அமைப்பாளர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்ட செயலாளர் சங்கரன், பொருளாளர் குணசேகரன், துணைத்தலைவர் மணியப்பன், செல்வராசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கே.கோபால் வரவேற்றார்

கூட்டத்தில் தேவிகாபுரம் ஊராட்சியை ஊராட்சி ஒன்றியமாக அமைக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக உயர்த்த வேண்டும்.

சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையை தாலுகா அளவில் தரம் உயர்த்த வேண்டும் பெரிய கொழப்பலூரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மகாலிங்கம், ராணி, பெரியநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏழுமலை நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்