< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
|26 May 2022 7:27 PM IST
ஓசூரில் ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்:
ஓசூரில், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் துரை தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கெம்பண்ணா, மனோகரன், சிவராஜ் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஓய்வூதியர் சங்கத்தினர், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, போக்குவரத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 78 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, அதில் உள்ள அனைவரையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.