சேலம்
சேலத்தில்அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற 3 ஆட்டோக்கள் பறிமுதல்2 லாரிகளுக்கு அபராதம்
|அன்னதானப்பட்டி
சேலம் குகை, லைன்மேடு, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராமரத்தினம் மற்றும் அதிகாரிகள் நெத்திமேட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிக அளவு பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற 3 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவை அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. மேலும், அதிக அளவில் பாரம் ஏற்றிச் சென்ற 2 லாரிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பள்ளி மாணவர்களை அதிக அளவு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து ஆய்வு பணிகள் நடைபெறும், என்றனர்.